அனந்தியை அச்சுறுத்திய புலனாய்வாளர்கள்


அட்சி மாற்றம் ஏற்பட்டால் நிம்மதியான வாழ்வு மலரும் என பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில் வட மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரனை புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் அச்சுறுத்தும் நிலை காணப்படுகின்றது.
மடு திருத்தலத்திற்கு பாப்பரசரை சந்திப்பதற்காக சென்ற காணாமல் போனோரின் உறவுகளுடன் கலந்து கொள்ள அனந்தி சசிதரன் சென்ற போதே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் அவரிடம் கேட்டபோது,
காணாமல் போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும் பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல் போனோரின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம்.
அன்றைய தினம் தட்சனாமருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் பேனோரின்உறவினாகளின் குழுவுடன் இணைந்து பாப்பாரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன்.
எனினும் நான் சென்ற வாகனம் நிறுத்தி வைக்கப்பட்ட இடத்திற்கு நான் இல்லாத சந்தர்ப்பத்தில் வருகை தந்த பொலிஸார் யாருடைய வாகனம் என எனது சாரதியிடம் கேட்டிருந்தனர். அவரும் எனது வாகனம் என சுட்டிக்காட்டியயைடுத்து சம்பவ இடத்திற்கு புலனாய்வாளர்கள் வருகை தந்து எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.
இ;ந் நிலையில் நான் அச்சுறுத்தல் காரணமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்த இடத்தில் இருந்து வேறு இடத்தில் சென்று மரத்தின் கீழ் இரவு பூராகவும் தங்கியிருந்து மறுநாள் எமது குழுவுடன் இணைய வேண்டிய நிலை ஏற்பட்டது.
புதிய ஆட்சி என சொல்லிக்கொள்பவர்கள் தொடரும் அச்சுறுத்தல்களுக்கும் தீவிர தமிழ் தேசியப்பற்றுள்ளவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல் தொடர்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *