அமெரிக்காவின் இன்றைய நிலை .


தலைகீழாக மாறிய ட்ரம்பின் வாழ்க்கை இனி அவருக்கு மாபெரும் சிக்கல் ஏற்படலாம் அவரின் அரசியல் வாழ்வே நொறுங்கிவிடலாம்.அடி மேல் அடி விழுந்த வண்ணம் உள்ள நிலையில் முதல் அடி கொடுத்திருப்பவர் ஈராக்கிய பிரதமர், அவர் “அமெரிக்கா எங்களிடம் சுலைமானியினை அழைத்து சமரசமாக பேசி பிரச்சினையினை தீருங்கள் என சொன்னார். நாங்களும் நம்பி வரசொன்னோம், சுலைமானி அப்படித்தான் வந்தார்.

வந்தவரைத்தான் கொன்றுவிட்டார்கள், இந்த கொடும் வஞ்சகம் எங்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது, இனி அமெரிக்காவுக்கும் எங்களுக்கும் எக்காலமும் உறவு இல்லை, அமெரிக்கா ஈராக்கை விட்டு கிளம்பலாம்”

பொதுவாக உளவு அமைப்புகள் இப்படி தந்திரமாக செய்யும் அடிமட்ட ஆட்களை கைக்குள் போட்டு மேல் மட்டத்தை நெருங்கி எதிரியினை அழைக்க சொல்லி பலமுறை தப்பவிட்டு எதிர்பாரா நேரம் விபத்தாகவோ ஊசியிலோ உணவிலோ காற்றிலோ விஷம் கலந்தோ முடித்துவிடுவார்கள்.

ஆனால் அமெரிக்க அதிபரே ஒரு உறுதிமொழி கொடுத்து அது மீறபட்டு கொலை நடந்ததென்றால் ஈராக் என்ன, எந்த நாடும் தாங்காது.

விஷயத்தை வெளியிடுவது சாதாரணம் அல்ல என்பது ஈராக்குக்கும் தெரியும், ஆனால் வலுவான சக்தி ஒன்று சொல்ல வைத்திருக்கின்றது.

இதனிடையே சுலைமானியின் இறுதி ஊர்வலமும் அஞ்சலியும் டெஹ்ரானில் நடந்தது, மொத்த டெஹ்ரானும் வந்து அழுதது, பல லட்சம் பேர் ஆத்திரத்தில் கத்திகொண்டிருந்தார்கள்.

உச்ச தலைவர் அலிகோமேனி கண்ணீர் விட்டதும் ஈரான் முழுக்க ஒரு எழுச்சி ஏற்பட்டது.

அந்த எழுச்சி ஈராக்கிலும் தெரிந்தது, மொத்த ஈராக்கும் அமெரிக்காவே வெளியே போ, என கத்த தொடங்கியாயிற்று.

அமெரிக்காவின் நிலை கிட்டதட்ட வியட்நாம் போர் முடிவில் அமெரிக்க மக்கள் காட்டிய எதிர்ப்பு போல் ஆயிற்றுஅமெரிக்காவின் நிலைLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *