அமெரிக்கா எம்மை ஏமாற்றிவிட்டது – துருக்கி ஜனாதிபதி


துருக்கி ஜனாதிபதி தயீப் எர்டோகன்குர்திஷ் படைகளை வெளியேற்றுவது தொடர்பாக எங்களுக்கு அளித்த உறுதிமொழியை அமெரிக்கா இன்னும் நிறைவேற்றவில்லை  தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி 120 மணி நேரத்தில் குர்திஷ் படைகள் அப்பகுதியிலிருந்து அகற்றப்படும் அமெரிக்க உறுதியளித்தது என்றும்  எனினும் அப்பகுதியில் இன்னும் குர்திஸ் படைகள் உள்ளனரென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் துருக்கி ஜனாதிபதி எர்டோகனும் நேற்று தொலைபேசி வாயிலாகத் தொடர்பு மேற்கொண்டிருந்தனர்.இதில் ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட கடுமையான நடவடிக்கைகள் பற்றியும், துருக்கி – சிரிய எல்லையில் தற்போதைய நிலவரம் குறித்தும்  பேசினர்.

இதன் போது அமெரிக்காவுக்கு வருமாறு எர்டோகனுக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். இதனைத்தொடர்ந்து நவம்பர் 13 வெள்ளை மாளிகையில் ட்ரம்ப்பை எர்டோகன் சந்திக்கவுள்ளதாகவும் இதன்போது குர்திஷ் படைகளின் பிரச்சனையை தெரிவிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *