இசையாலே பார்வையை உணரும் வைக்கம் விஜயலக்ஷ்மி


தற்போது அதிகளவான ரசிகர்களை ஒரு பாடல்மூலம் தன் வசப்படுத்தியுள்ளார் வைக்கம் விஜயலக்ஷ்மி. காற்றே காற்றே நீ மூங்கில் துளையில் கீதமிசைப்பதென்ன….இப் பாடலை நீங்களும் கேட்டிருக்கிறீர்களா. உங்களுக்காக இங்கே இணைக்கப்பட்டுள்ளது, முழுமையாக கேளுங்கள் உங்களை நீங்களே மறந்து நிற்பீர்கள்.

யாரிந்த வைக்கம் விஜயலக்ஷ்மி, பிறவியிலே கண்பார்வையிழந்த ஓர் மாற்றுத் திறனாளி ஆவார். கேரளாவில் வைக்கம் என்ற இடத்தில் முரளிதரன் விமலா தம்பதியினருக்கு 1981ம் ஆண்டு பிறந்தார். பிறக்கும் போதே கண் பார்வை குறைபாட்டுடன் பிறந்த இவருக்கு இசை மீதான திறமை கூடுதலாகவே இருந்தது.

சிறு வயதில் தமிழ்நாட்டுக்கு வந்த இவர் இசையிலும் திரைப்படப் பாடலிலும் சிறந்து விளங்கிய கலைஞர்களின் இசையை கேட்டு தனது சங்கீத அறிவை வளர்த்தார். சிறுவயதே ஆன இவர் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்ட இசைக்கச்சேரிகளை நடாத்தியுள்ளார். அலாதியான திறமையுடைய விஜயலக்ஷ்மி 300க்கும் மேற்பட்ட ராகங்களை கையாளக்கூடியவர் மேலும் 600 க்கு மேற்பட்ட சொந்த படைப்புக்களை உருவாக்கியுள்ளார்.

திறமைமிக்க இந்த பிறவிக் கலைஞரை மலையாள சினிமாவில் பாடவைத்துள்ளார் இசையமைப்பாளர் எம் ஜெயச்சந்திரன். அதே பாடலை கவிஞர் பழனிபாரதியின் கவி வரியில் பாடகர் ஸ்ரீராமுடன் வைக்கம் விஜயலக்ஷ்மி பாடிய பாடலே இதுவாகும்.

இவருடைய பாடலை பதிவு செய்யும் போது கவிஞர் பழனிபாரதியும் கூட இருந்தார். அந்த நேர உணர்வை இவ்வாறு குறிப்பிடுகிறார் ” பிறவியிலேயே பார்வையை இழந்த வைக்கம் விஜயலட்சுமி எனது பாடலைப் பாட வந்தபோது பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. அப்படி ஒரு பரவசம் அந்த முகத்தில் ஒளிர்ந்தது. அந்தக் குரலில் கே.பி. சுந்தராம்பாள், டி.கே.பட்டம்மாள், பி.லீலா, எல்.ஆர். ஈஸ்வரி போல ஒரு தனித்துவம் ஒலித்தது. ஆணாதிக்கமற்ற – கட்டுப்பாடற்ற – சுதந்திரமான ஒரு பெண்ணின் குரலை நான் விஜயலட்சுமியிடம் உணர்ந்தேன்…”

ஆசியா நெட் தொலைக்கட்சியில் ரசிகர்கள் அவரை இந்த வருடத்தின் சிறந்த பெண்மணியாகத் தேர்ந்தெடுத்திருப்பதும் அவருக்கு கிடைத்த அங்கீகாரமாகும். இப்போது அந்த பாடலை நாமும் கேட்போமா…

– Mithu –4 thoughts on “இசையாலே பார்வையை உணரும் வைக்கம் விஜயலக்ஷ்மி

 1. பாடலும், குரலும், அனுபவித்து பாடுவதும், நன்றாகயிருக்கிறது.
  மேலும் வளர விஜயலட்சுமிக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

 2. உன்னிடம் பார்வை இல்லை – ஆனால்
  அதை வைத்தே உன் வாழ்க்கையை
  அர்த்தமாக்கிறாய்….. சாதிக்கிறாய்…….

  எம்மிடம் பார்வை உண்டு – ஆனால்
  சாதித்தது எதுவும் இல்லை
  எமக்கு தெரிந்த வெளிச்சம்
  இப்போ இருட்டாய் தெரியுது
  உன் திறமைக்கு முன்னால்….

  முயற்சியும் ஆர்வமும் இருந்தால்
  பார்வை எதுக்கு….. அழகு எதுக்கு….
  என்று எல்லோரையும் நினைக்க வைத்த
  வைக்கம் விஜயலக்ஷ்மிக்கு
  Hats Off……

  ST from Canada

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *