இது பெண்களின் சக்தியால் சாத்தியமானது!


யார் சேவை செய்வார்கள் என்பதை மக்கள் நன்கு அறிந்து எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர் என மோடி பெருமிதம்!!

இதுவரை தேசிய கட்சிகள் நுழையாத சில மாநிலங்களிலும் பா.ஜ.க நுழைந்துள்ளது. அதே போன்று சில மாநிலக் கட்சிகளும் பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக மோடியின் பெயரை பரிந்துரை செய்து ஒருமனதாக தேர்வும் செய்தனர்.

இதை தொடர்ந்து கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி கூறுகையில்;

யார் சேவை செய்வார்கள் என்பதை அறிந்து மக்கள் நம்மை தேர்ந்தெடுத்துள்ளனர். 2014 தேர்தலை விட இந்த தேர்தலில் பாஜக 25 சதவீதம் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

புதிய இந்தியாவை உருவாக்க இந்த தேர்தலில் மக்கள் தீர்ப்பு வழங்கி உள்ளனர். இந்த தேர்தலில் மக்கள் வழங்கிய தீர்ப்பு உலகையே ஆச்சரியப்பட வைத்துள்ளது. என்னை நம்பிய கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், மக்களுக்கும் நன்றி.

புதிய கடமைகளை முழுமையாக நிறைவேற்ற தயாராக உள்ளோம். அனைவரும் ஒன்றிணைந்து புதிய இந்தியாவை கட்டமைப்போம் மாற்றுவோம். நான் உங்களில் ஒருவன், உங்களுக்கு சமமானவன். அனைவரின் ஆலோசனைகளை கேட்டறிந்து புதிய இந்தியாவை உருவாக்கும் பணியை மேற்கொள்வோம்.

சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக பாராளுமன்றத்தில் பெண் எம்பிக்கள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இது பெண்களின் சக்தியால் சாத்தியமானது” என அவர் தெரிவித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *