இதை படியுங்கள்! தானம் செய்யும் பொருளுக்கேற்ற பலன் கிடைக்குமாம் .


தானம் நம் கர்ம வினையைநீக்கும் .இல்லாதவருக்கு செய்யும் தானமானது நம் கர்ம வினையை நீக்குவதுடன், நம்மைகடவுள் அருகில் கூட்டி செல்கிறது.அதற்கேற்ப ஒவ்வரு தானத்துக்கும் ஒவ்வரு பலன் உண்டு .அதை இப்போது பார்ப்போம் .

தானத்தில் சிறந்தது அன்னதானம்.எந்த தானம் செய்தாலும் போதும் என்ற மனம் ,பெறுபவருக்கு ஏற்படாது. இன்னும் கொடுக்க மாட்டார்களா? என்ற எண்ணம் வாங்குபவருக்கு தோன்றும்.ஆனால் அன்னதானம் ஒன்றே வயிறு நிரம்பியவுடன் திருப்தி அடையும்.

 • அன்னம் -வறுமை ,கடன் நீக்கும்
 • துணி தானம் செய்தால் ஆயுள் அதிகமாகும் .
 • தேன் தானம் -புத்திர பாக்கியம் கிட்டும் .
 • தீப தானம் -கண் பார்வை தெளிவாகும்.
 • அரிசி -பாவங்களை போக்கும்
 • நெய் -நோய்களை போக்கும்
 • நெல்லிக்காய் -ஞானம் கிடைக்கும் .
 • பால் -துக்கம் நீக்கும்
 • பழங்கள் -புத்தியும் ,சித்தியும் கிட்டும்
 • தங்கம்-குடும்ப தோஷங்களை நீக்கும்.
 • வெள்ளி தானம் செய்தால் மனக்கவலை நீங்கும்.
 • பசு -ரிஷி,தேவர் ,பிதுர் கடன்கள் அகலும் .
 • தேங்காய் -நினைத்த காரியம் வெற்றி அடையும்.
 • தயிர் -இந்திரிய விருத்தி உண்டாகும்.
 • உங்கள் வீட்டு பக்கத்திலே பசு இருந்தால் அதற்கு அருகம் புல் கொடுங்கள் .வாழைப்பழம் கொடுத்தால் நம் கர்ம வினைகள் எல்லாம் போய் விடும் .பசுவிற்கு செய்யும் தானம் நம் முன்னோர்களுக்கு செய்வது ஆகும் .
 • கோவிலுக்கு போனால், அங்கே இருக்கிற ஏழைகளுக்கு அன்னதானம் செய்யுங்கள் .
 • உங்களுக்கு அந்த பரம்பொருள் குறைவில்லாத வாழ்வை அளிப்பார் .


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *