இந்திய விண்வெளிவீரர்களுக்கு ரஷ்யாவில் பயிற்சி..


ககன்யான்’ திட்டத்தில் விண்வெளிக்கு செல்ல தேர்வான 4 பேருக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றுஇந்திய  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் விடுத்துள்ள அறிக்கையில், தேர்வுக்கு பிறகு, 4 விண்வெளி வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களுக்கு ரஷ்யாவில் 11 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும் என்றும், இம்மாதம் 3-வது வாரத்தில் பயிற்சி தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

11 மாத பயிற்சி முடிந்து திரும்பிய பிறகு, இந்தியாவிலும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்றும்,விண்கலத்தை எப்படி இயக்குவது? எப்படி பணியாற்றுவது? உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *