இருட்டில் தொலைபேசி பாவிப்பவர்களுக்கு எச்சரிக்கை !!


இருட்டில் கையடக்கத் தொலைபேசியை உபயோகிப்பதன் காரணமாக பாடசாலை மாணவர்கள் அதிகளவில் கண் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவித்த விசேட கண்மருத்துவ நிபுணரும், ஆலோசகருமான வைத்தியர் எம். மதுவந்தி திஸாநாயக்க இரவு நேரத்தில் மாத்திரமல்லாது தொலைபேசி பாவனையை முடிந்த அளவு குறைத்துகொள்வதன் ஊடாக கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை முடிந்த அளவு கட்டுப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், இருட்டில் கையடக்க தொலைபேசி திரையை பார்ப்பதன் ஊடாக கண்களின் கருவிழிகள் பாதிப்புக்குள்ளாகும். கண்தோலின் மேற்பகுதியை ( எபிடோமிஸ்) தொலைபேசியின் கதிர்கள் பாதிப்பதனால் தோலின் அதீத வெப்பத்தை தாங்கும் திறன் குறைவடையும்என்றும் இதன்காரணமாக சருமத்தில் வரட்சி உள்ளிட்ட தோல் நோய்கள் ஏற்படும்.அதிக நேரம் கையடக்க தொலைபேசியில் பேசும் போது அதிலிருந்து வெளியேறும் கதிர்கள் அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும். அது மூளை,காது ,இதயம் போன்ற உடலின் முக்கிய அங்கங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்எனவும் கூறியுள்ளார்.

இந்நிலையில் ,தாய்லாந்து ,சீனாபோன்ற நாடுகளிலும்; கையடக்க தொலைபேசி பாவனையினால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் அதிகரித்துள்ளமை ஆய்வுகளின் படி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காணரமாக மூக்கு கண்ணாடியை உபயோகிப்பவர்களின் அளவும் அந்த நாடுகளில் அதிகரித்துள்ளது.

அதேபோன்று எமது நாட்டிலும் பாடசாலை மாணவர்களுக்கு பார்வை குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளது.ஆகவே ,பாடசாலை மாணவர்கள் தொடர்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்யெ அவசியமானதாகும்.தொலைபேசிப் பாவனையை கட்டுப்படுத்த தவறும் பட்சத்தில் அதனால் கண்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை சத்திர சிகிச்சையின் ஊடாகவே குணப்படுத்த வேண்டிய நிலைஏற்படும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *