இலங்கையில் இடம்பெறுவது திட்டமிட்ட இனவழிப்பு!


இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கூட, தமிழ் மக்கள் மீதான அடக்குமுறை தொடர்ந்து கொண்டிருப்பதாக தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

தமிழர்களது பிரச்சினைகள் தற்போது வரையில் தீர்க்கப்படாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு தமிழர்கள் சொந்த வாழ்விடங்களை செல்லக்கூடிய நிலை மற்றும் அவர்களது காணிகளை மீள பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை இன்றும் ஏற்படவில்லை என கூறிய அவர் சிங்கள குடியேற்றம் நாளுக்கு நாள் தமிழர் பகுதியில் அதிகரித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

மேலும் இலங்கையில் இடம்பெறுவது போர்க்குற்றம் என கூறுவது தவறு என்றும் இதுவொரு திட்டமிட்ட இனவழிப்பு என்றும் அவர் கூறினார்.

நன்றி-vithushan



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *