இலங்கை அகதிக்கு ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள்!


 

இலங்கை அகதியாக ஒருவருக்கு இந்தியவில் கலானி என்பவருக்கு ஒரே பிரசவத்தில் 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன.

யுத்தகாலங்களில் இலங்கையில் இந்தியாவின் ஈரோடு மாவட்டம் அறச்சலூரில் உள்ள அகதி முகாமை சேர்ந்த விஜயகுமார் அதே பகுதியை சேர்ந்த கலானி என்பவரை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் கர்ப்பம் தரித்த கலானியை விஜயகுமார் சென்னிமலையில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்த போது அங்கு கலானிக்கு அழகான 4 குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து கலானியின் உறவினர் ஒருவர் கூறும்போது, “கலானிக்கு 2 ஆண் குழந்தையும், 2 பெண் குழந்தையும் பிறந்துள்ளன. எங்களது உறவினர்களில் சிலருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. ஆனால் 4 குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறந்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது”, என்றார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *