தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழும் சிரஞ்சீவியின் படத்தில் நடிகை அனுஷ்கா நடிக்க மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அனுஷ்கா பிரபல நடிகர்களுடன் பல படங்களில் ஜோடி போட்டு நடித்திருந்தாலும் பாகுபலி பெரிய அளவில் அவரை உயர்த்துக்கு கொண்டுச் சென்றது.
அதேபோல் ருத்ரமாதேவி படமும் சரித்திர கதையாக அமைந்தது. சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி சரித்திர படத்திலும் ராணி கதாபாத்திரத்தில் நடித்தார்.
இந்நிலையில் சிரஞ்சீவி நடிக்கும் கொமர்ஷியல் படமொன்றில் நடிக்க அப்பட இயக்குனர் கெராட்டாலா சிவா அணுகியபோது ஏற்க மறுத்துவிட்டார் எனவும் அதேசமயம் கவுதம் மேனன் அடுத்து இயக்கவுள்ள தமிழ், தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சரித்திர கதை அம்சமுள்ள கதைகளில் நடிக்க அவரை தேடி நிறைய வாய்ப்புகள் வரத் தொடங்கின. ஆனாலும் தற்போது சரித்திர படத்தை ஒதுக்கி வைப்பது என்று முடிவு செய்திருக்கிறார் என கூறப்படுகின்றது.