ஈழதமிழருக்கு இரட்டை குடிஉரிமையா ?-பா.ம.க.


பா.ம.க. பொதுக்குழுக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது சிறப்பு பொதுக்குழு கூட்டம் நேற்று நடை பெற்ற போதே இது தீர்மானம் எடுக்கப்பட்டது

பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே. மணி தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் டொக்டர் அன்புமணி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
முன்னாள் மத்திய அமைச்சர்களான வேலு, ஏ.கே.மூர்த்தி மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதன்போது, ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும். தமிழகத்தில் குடிமக்கள் பதிவு திட்டத்தை செயல்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டில் இடஒதுக்கீட்டின் அளவை அதிகரிக்க வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். அல்லது காலவரையற்ற பரோல் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *