உலக மக்களிடம் வாழ்த்துக்களை பெறும் மியன்மார்க் தமிழர்கள்…


அண்மையில் மியன்மார் வாழ் தமிழர்கள் செய்திருக்கும்  செயற்பாடு உலகெங்கும் வாழும் பலருடைய கவனத்தை ஈர்த்துள்ளது.

தமிழர்கள் என்ற மொழியினால் ஒன்றுபட்ட இனம் பல்வேறு காரணங்களால் வெவ்வேறு நாடுகளிலும் பரந்தும் சிதறியும் வாழ்கின்ற நிலையில் அவ்வாறு தஞ்சமடைந்திருக்கும் நாடுகளில் வெற்றிகரமாக சில தரப்பும் உரிமைகளற்று சில தரப்பும் இருந்து வருகிறது .

இதில் மியன்மார் தமிழர்கள் இன்னும் விசேடமானவர்கள் . தொழில் நிமித்தமாய் சென்றடைந்த மியன்மார் தேசத்தில் இன்று தமது கடின உழைப்பினாலும் முயற்சியினாலும் தீர்மானம் எடுக்கும் சக்திகளாக பலமாக அந்த நாட்டிலே உருவாகி உலக வாழ் தமிழர்களுக்கு நல்லதொரு முன்னுதாரணமாகி இருக்கிறார்கள்.

அண்மையில் அங்குள்ள மிகப் பிரசித்தி பெற்ற ஸ்வேதகோன் பௌத்த ஆலயத்தில் மியன்மார் வாழ் எல்லா தமிழ் அமைப்புகளும் ஒன்றுகூடி ஒரு மாபெரும் அன்னதான நிகழ்வினை நடத்தியிருக்கிறார்கள்.பௌத்த ஆலயத்தில் தமிழர்கள் இவ்வாறான ஒரு நிகழ்வினை நடத்தியிருப்பது இதுவே முதல் முறை .

இந்த நிகழ்வில் சுமார் 3000 ற்கும் அதிகமானவர்களுக்கு உணவளிக்கப்பட்டிருக்கிறது.தமிழ் இளைஞர்கள் பலர் ஈடுபட்டிருந்தமை இன்னும் சிறப்புக்குரியது .Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *