எலுமிச்சை தீபத்தின் பலன் .


கனிகளில் ராஜகனி எது தெரியுமா ? எலுமிச்சம்பழம் தான் அது . இறைவியான துர்க்கைக்கு நிகரானதாக கருதப்படும் எலுமிச்சம்பழம், தனது பிஞ்சு, காய், பழம், ஊறுகாய் போன்ற எந்த நிலையிலும் தனது புளிப்புத்தன்மையை மாற்றிக் கொள்ளாது. (இறைவனும் எந்த நிலையிலும் தன் இறைத்தன்மை மாறாதவன்).

இப்படி எல்லா வகையிலும் உயர்ந்த கனியை ஸ்ரீதுர்க்கைக்கு முன்பாகவே வைத்து இருதுண்டாக்கி, அதனை பிதுக்கி திருப்பி அதில் எண்ணையை ஊற்றி விளக்கேற்றினால் அதனால் நிச்சயமாக எந்த நற்ப் பலனும் ஏற்படாது.

மேலும் தீய பலன்கள் நடைபெறத்தான் வழியுள்ளது. அதுமட்டுமல்ல எலுமிச்சம்பழ விளக்கினால் கர்ப்பப்பையில் கோளாறுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் சொல்கின்றன, அதிலுள்ள சிட்ரிட் எனும் அமிலம் நமது சுவாசத்தில் கலந்து உள்சென்று தீங்கினை செய்கின்றது.

அதாவது ஒருவர் வைத்து விட்டுப் போன எலுமிச்சம்பழ விளக்கு எரிந்து கொண்டிருக்கும்போது மற்றொருவர் தனக்காக சில எலுமிச்சம்பழ விளக்குகளை ஏற்றுவார் அல்லவா? அப்போது இவருக்கு முன்னர் ஏற்றப்பட்ட விளக்கிலிருந்து எலுமிச்சம்பழத்தின் ஓரங்கள் கருகி எரியும் போது அதிலிருந்து வெளிப்படும் சிட்ரிட் அமிலப் புகையானது நமது உள்சென்று கர்ப்பப் பையினை அரித்து குழந்தையினை தாங்கும் வலிமையை இழந்து விடுவதாகவும் அதனால் புத்திரபாக்கியமே கிடைக்காது எனவும் தெரிவிக்கின்றார்கள் ஆய்வாளர்கள்.

எலுமிச்சை மரத்தில் எப்போதாவது ஒருமுறை எலுமிச்சம்பழம் மேல் நோக்கியவாறு காய்க்குமாம், அந்த பழத்தில் தீபம் ஏற்றலாம். (எல்லா பழங்களும் கீழ்நோக்கி நிற்க ஒன்றுமட்டும் மேல்நோக்கி இயற்கையை எதிர்த்து நிற்பதால்) அந்த பழம் பாதி அளவு மஞ்சளும், பாதியளவு பச்சையுமாக கனிந்துவரும் போது ஒரு வெள்ளிக்கிழமை காலையில் முதல்ஓரையான சுக்கிர ஓரையில், அந்த பழத்தை ஆயுதமின்றி விரல்களால் கிள்ளி எடுத்து, அதனை ஒரு சிகப்பு கலர் பட்டுத்துணியின் உள்வைத்து, இரண்டு கைகளாலும் அப்படியே அந்த பழத்தை கசக்க வேண்டும். அதிலிருந்து கொஞ்சமும் நீர் வெளியாகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அந்த பழத்தினை விரல் நகத்தினால் இரண்டாக கிழித்து அந்த சாற்றினை அந்த பட்டுத் துணியிலேயே பிழிந்து அந்ததுணியை ஸ்ரீதுர்க்கையின் பாதங்களில் சார்த்தி, பின் அந்த எலுமிச்சம்பழத்தை பிதுக்கி திருப்பாமல் அப்படியே வைத்து விளக்கேற்ற வேண்டும்.

இப்படி விளக்கேற்ற முடியுமானால் யார் வேண்டுமானாலும் எலுமிச்சம்பழ விளக்கேற்றுங்கள். எல்லோராலும் எலுமிச்சம்பழ விளக்கேற்ற முடியாது, எலுமிச்சம்பழ மரம் வீட்டில் இருப்பவர்கள் வேண்டுமானால் கவனித்து பார்த்து ஏற்றி மகிழலாம், அன்னையை மகிழ்விக்கலாம்.One thought on “எலுமிச்சை தீபத்தின் பலன் .

  1. எலுமிச்சம் பழமா? … எலிமிச்சம் பழமா? … எலிமிச்சைதான் கரெக்ட் … ஒரு கூடைல நிறைய பழங்கள் இருந்திச்சாம் … அங்க வந்த சில எலிங்க அந்த கூடையில இருந்த பழங்களை எல்லாம் சாப்பிட்டதாம். ஆனா ஒரே ஒரு பழத்த மட்டும் சாப்பிடாம மிச்சம் வச்சுட்டு போயிட்டுதாம் … ஏன்னா அது புளிப்பு…அன்றிலிருந்து இன்றுவரை அந்த பழத்த எலி மிச்சம் வைத்ததால ”எலி மிச்சம் பழம்” என்று அன்போடு அழைத்து வருகிறோம்… >> சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *