காளி என்ற பெயர் வர காரணம்.


இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும். காளன் என்னும் சிவபெருமானின் துணைவி என்பதால் காளீ என்றழைக்கப்பட்டாள். காளி என்ற பெயர் வடமொழியின் காலா என்ற சொல்லிலிருந்து உருவானது. உண்மையில் காலீ என்பதே சரியான உச்சரிப்பு ஆகும். காலீ என்பதன் பொருள் காலத்தை வென்றவள் என்பதாகும். மற்றொரு பொருள் கரிய நிறம் கொண்டவள் என்பதாகும். நாமும் காலீ என்றே அழைப்போம்.

காலீ காலத்திற்கும், கால மாறுதல்களுக்கும் அதிபதி ஆவாள். ஏவல், பில்லி, சூனியம், செய்வினை இவற்றிற்கும் காரணம் இவளே. இவற்றை போக்குவதும் இவளே. காலீ நேர்மையின் வடிவம். நாம் நேர்மையாக இருந்தால் காலீயை வைத்து யாரும் எவ்வித துன்பங்களையும் நமக்கு செய்ய இயலாது. மாறாக யார் துன்பம் செய்ய நினைத்தார்களோ அவர்களே அழிவது நிச்சயம்.

காலீ ஞானத்தின் வடிவம். அறியாமை இருளை போக்குபவள். தன்னை அண்டியவர்களின் பயத்தினை போக்குபவள். எவ்வித துன்பங்களிலிருந்தும் தம் பக்தர்களை காப்பவள். கருணையின் வடிவம். ஆனால் நமது பாரத நாட்டில் காலீயைப் பற்றி தவறான கருத்துக்கள் பரப்பப்பட்டுள்ளன. அதாவது காலீ என்ற தெய்வம் மந்திரவாதிகளுக்கு மட்டுமே உரித்தான தெய்வம் போலவும், காலீயை வழிபடுபவர்கள் எல்லாம் மந்திரவாதிகள் போலவும் கருத்துகள் உலவுகின்றன.

ஆனால் இது உண்மையல்ல. காலீ அன்னையின் வடிவம். தீமைகளை அழிப்பவள். வெற்றிகளை அளிப்பவள். காலம் மற்றும் மரணம் இவற்றிற்கு காரணமான தெய்வம் ஆவாள். இவளின் அருள் இருந்தால் காலத்தையும், மரணத்தையும் வெல்லமுடியும். காலீ ஞானத்தின் வடிவம். ஞானத்தையும், செல்வத்தையும் அளிப்பவள். கல்வியையும் அளிப்பவள். துணிவை தருபவள். பயத்தை போக்குபவள். நோயிலிருந்து விடுவிப்பவள். நோய்களை போக்குபவள். மரணமிலா பெருவாழ்வு தருபவள்.

மனிதர்கள் மட்டும் அல்லாமல், தேவர்களுக்கும், அசூரர்களுக்கும் அருள்பாலித்தவள் இவளே. சிவபெருமானின் உயரிய வடிவமான சரபேஸ்வரருக்கும் சக்தி அளித்தவள் இவளே.

இவளை வழிபடுவதில் பல முறைகள் உண்டு. மனதில் நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காப்பவள் இந்த காலீ. காலீயின் அருள் பெற்றவர்களே இதற்கு சாட்சி. கொல்கத்தா தட்சினேஸ்வரத்தில் காலீயை வழிபட்டு அவளின் அருள் பெற்ற பகவான் ராமகிருஷ்ண பரமஹம்சரே மிகச் சிறந்த உதாரணம். மகாகவி காளிதாஸ், தெனாலிராமன் போன்றோரும் இதில் அடக்கம்.

காலீயின் பலவடிவங்கள் உண்டு. அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை தரவல்லன.

இலங்கை வேந்தன் இராவணனின் மகன் மேகநாதன் என்றழைக்கப்பட்ட இந்திரஜித் காலீயை நோக்கி தவமும், வேள்வியும் நடத்தி இந்திரனையும் வெல்லும் ஆற்றல் பெற்றான். அவன் ராம லட்சுமணர்களை அழிக்க செய்த நிகும்பலை யாகம் அனுமனால் பாதியிலேயே அழிக்கப்பட்டது. அதனால் தான் அவன் அழிய நேரிட்டது என்பதும் கவனிக்கத்தக்கது. நிகும்பலை என்பவள் இலங்கையில் உள்ள காலீயின் பெயர் ஆகும்.

வீட்டில் தினமும் விளக்கேற்றி 27 முறை கீழ்க்கண்ட மந்திரத்தினை நமது பூசையறையில் செபித்து இத்தகைய காலீயை வழிபட்டு வாழ்வில் அனைத்து வளங்களும் பெறுவோம்.
“ஓம் ஹ்ரீம் மஹா காள்யை நமஹLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *