கிணற்றில் விழுந்து சிறுவன் பலி!


வட்டுக்கோட்டை அராலி கிழக்குப் பகுதியில் சிறுவன் ஒருவன் தவறுதலாக கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று மாலைவீட்டில் விளையாடிக் கொண்டிருந்த  5 வயதான குகதீசன் நிருஜன் என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக பலியாகியுள்ளார்.

இந்நிலையில் சிறுவனின் இறப்பு விசாரணையினை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்ட நிலையில் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *