குருதிச்சோகை ஏற்படுத்தும் பாதிப்புக்கள்.


குருதிச்சோகை ஏற்படுத்தும் பாதிப்புக்கள்.

ரத்தத்தில் இரும்பு சத்து (Iron), விட்டமின் பி (Vitamin A) என்பன குறைவாகக் காணப்படல் அல்லது குருதியில் செங்குருதி சிறுதுணிக்கைகள் குறைவடைதல் அல்லது இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைதல் என்பவற்றினால் தான் குருதிச்சோகை ஏற்படுகின்றது.

இதன் விளைவாக உடல் உள் உறுப்புகள் உள்ளிட்ட அனைத்து பாகங்களுக்கும் ஒட்சிசனை ஒழுங்குமுறையாக கொண்டு செல்லும் செயற்பாட்டில் வீழ்ச்சி ஏற்படும். இதன் விளைவாகவே இது குருதிச்சோகை நோய் எனப்படுகின்றது.

இக்குருதிச்சோகை காரணமாக பிரசவத்தின்போது நெருக்கடிகள் ஏற்படலாம். குருதி இழப்பும் கூட தோற்றம் பெறும்.

இதனால் தான் பிரசவகால இறப்புகள் ஏற்படுகின்றன. அத்தோடு கர்ப்பிணிப் பெண் குள்ளமாக இருப்பதாலும் இரும்புச்சத்து குறைபாட்டாலும் கூட குருதிச்சோகை ஏற்படும்.

அதன் காரணத்தினாலும் பிரசவத்தின் போது தாய் இறக்கும் அச்சுறுத்தல் அதிகமாகும்.

குறிப்பாக குருதிச்சோகையால் பாதிக்கப்பட்ட தாயின் கரு பலவீனமடைந்ததாகக் காணப்படும். அதன் விளைவாகவே இவ்வாறான தாய்மாருக்கு குறை பிரசவம் (Early delivery) அல்லது குறைந்த எடையுள்ள குழந்தையை (under weight babies) பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

மேலும் குருதிச்சோகை உள்ள தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளாகக் காணப்படும். அக்குழந்தைகள் நோய்களுக்கு உள்ளாவதற்கான வாய்ப்புக்களும் மிக அதிகமாகும்.

என்றாலும் ஒரு நாடு அல்லது ஒரு மாகாணம் குருதிச்சோகையின் காரணமாக தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1-4வீதம் வரை இழக்கின்றது என ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக இரும்பு சத்து குறைபாடு (Iron deficiency) காரணமாக ஏற்படும் உடல் ரீதியானதும் அறிவு ரீதியானதுமான இழப்புகளை ஒட்டு மொத்தமாக கணக்கிட்டால் அது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.05வீதமாக இருக்கும் எனவும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை உலக வங்கியின் மதிப்பீட்டின் படி, அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் இரும்பு சத்து குறைபாடு, அயடின் குறைபாடு (Iodine deficiency) மற்றும் விட்டமின் ஏ குறைபாடு (Vitamin A deficiency) ஆகியவற்றை சேர்த்து கணக்கிட்டால் அவற்றின் பொருளாதார செலவு உள்நாட்டு உற்பத்தியில் 5வீதமாக இருக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

ஆகவே கர்ப்பிணிப் பெண்களும் தாய்மாரும் குருதிச்சோகை தொடர்பில் விஷேட கவனம் செலுத்த வேண்டும். அதனைத் தவிர்த்துக் கொள்வதில் அதிக அக்கரை செலுத்த வேண்டும்.

உடல் உள ஆரோக்கியம் நிறைந்த பரம்பரையை உருவாக்குவதற்கும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பதற்கும் குருதிச்சோகை அற்ற சமூகம் இன்றியமையாததாகும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *