கொரோனாவை முடிவுக்கு கொண்டுவரும் சீனா!!


சீனாவில் உருவான கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும்  போட்டியில் பல நாடுகளும், ஆய்வகங்களும் ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில் கொரோனா தொற்றை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய மருந்து ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக சீன ஆய்வகம் ஒன்று தெரிவித்துள்ளது.

சீனாவின் புகழ் பெற்ற பீகிங் பல்கலைக்கழக மரபியல் ஆய்வுத் துறையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த மருந்தை அளிப்பதன் மூலம் கொரோனா நோயாளிகள் விரைவில் குணமடைவதுடன், வைரசுக்கு எதிரான குறுகிய கால நோய்எதிர்ப்புத் திறனும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் பாதித்த எலியின் உடலில் இந்த மருந்தை செலுத்திய போது 5 நாட்களில் வைரசின் எண்ணிக்கை பலமடங்கு குறைந்ததாகவும் இந்த ஆண்டு இறுதியில் இந்த மருந்து தயாராகி விடும் எனவும் சீன பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *