கோவிலில் பெண்ணின் புடவையில் திடீரென பற்றிய தீ!


கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்ள கோவில் ஒன்றில் வழிபாடு செய்ய வந்த பெண் ஒருவர், கீழே எரிந்து கொண்டிருந்த சூடத்தை கவனிக்காததால், தீ மெதுவாக பெண்ணின் புடவையில் பற்றியது.

இதனை கவனிக்காத அந்தப் பெண், நடந்து செல்கையில் காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவியது. இதனால், அதிர்ச்சி அடைந்த பெண் பதற்றத்துடன் கூச்சலிட்டார். பின்னர், தீ விரைவாக உடல் முழுவதும் பரவிய நிலையில் ஓடிச்சென்று அங்குள்ள அறை ஒன்றில் கீழே விழுந்தார்.

அங்கிருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும், பலத்த காயங்களுடன் அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நன்றி – pirahash



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *