சர்ச்சையை கிளப்பியுள்ள அமெரிக்க உடன்படிக்கை..


இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அண்மையில் திருகோணமலை நகரசபையுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை செய்து கொண்டுள்ளது. இவ் உடன்படிக்கை கல்வி வளர்ச்சி மேம்பாட்டுக்காக என இரு தரப்பும் தெரிவித்தபோதும் கொழும்பு தனது கோபத்தை காட்டியுள்ளது.
அமெரிக்காவிடம் இருந்து உதவிகள் பெறுவதோ அல்லது கட்டுப்படுத்தக்கூடிய உடன்படிக்கைகள் மூலம் அமெரிக்க செயல்பாடுகளுக்கு இலங்கையை பயன்படுத்த இடம் கொடுப்பதோ இலங்கைக்கு ஒன்றும் புதிதல்ல. இலங்கையின் வடமேற்கு பிரதேசத்தில் வாய்ஸ் ஒப் அமெரிக்கா இன் தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைத்ததும், அமெரிக்க விமானங்களுக்கு எரிபொருள் நிரப்ப இடம் கொடுத்ததும், பரஸ்பரம் ராணுவ பயிற்ச்சிகள் இடம் பெற்றதும் கடந்த கால சம்பவங்கள். இவற்றுடன் ஒப்பிடும் பொது கல்விக்கான ஒரு கூட்டு முயற்சி ஒண்டும் பாதகமானதல்ல.
இலங்கை அரசு இதனால் குழப்பமடைந்தமைக்கு என்ன காரணம்? அமெரிக்காவுடனான உறவில் விரிசல் உண்டானபின் முன் எச்சரிக்கையுடன் இருப்பதற்காகவா அல்லது வேறு யாரையாவது திருப்திப்படுத்துவதற்காகவா ?


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *