சாய்பாபாவிற்காக வியாழன் விரதம் இருப்பது ஏன் ?


சாய்பாபாவை குருவாக ஏற்று வழிபடுவதால் குருக்குரிய நாளாகிய வியாழனை விரத நாளாக கொள்கின்றோம். சாய்பாபாவிற்காக நாம் இருக்கும் விரத முறைகளை பற்றி விரிவாக காணலாம்.

இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமையானாலும், சாய்பாபாவின் நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம்.

எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாய்பாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

*காலை அல்லது மாலையில் சாய்பாபாவின் படத்திற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன் மேல் சாய்பாபா படத்தை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும்.

மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாய்பாபா விரத கதையைப் படிக்கவும்.

சாய்பாபாவை பூஜை செய்து நைவேத்தியம் வைத்து (பழங்கள், இனிப்பு, கற்கண்டு எதுவானாலும் ) பிரசாதத்தை விநியோகிக்கவும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *