சீனாவினால் அடுத்து தயாராகும் உயிர்க்கொல்லி வைரஸ்.


சீனாவின் வூகான் நகரில் இருந்து புறப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுதும் ஆயிரக்கணக்கானோரை காவு வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அங்கு வேறொரு உயிர்க்கொல்லி வைரசுக்கு ஒருவர் பலியாகியுள்ளார்.

ஹண்ட்டா வைரஸ்… அணில், எலிகள் உள்ளிட்ட கொறித்துண்ணிகளின் உமிழ்நீர், மலம், சிறுநீர் உள்ளிட்டவற்றால் காற்று மாசுபாடு ஏற்பட்ட இடங்களில் சுவாசிப்பவருக்கு பரவுகிறது.

நுரையீரல் சார்ந்த நோயை ஏற்படுத்தும் இந்த வைரஸ் மனிதருக்கு மனிதர் பரவுவதில்லை. இந்த வைரசால் பாதிக்கப்பட்டவருக்கு தொடக்கத்தில் காய்ச்சல், தசைவலி, சோர்வு, தலைசுற்றல் உள்ளிட்டவை ஏற்படும் என்றும் தொற்று நுரையீரலை அடையும் போது இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கும் இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு சென்றால் உயிர் பிழைக்க வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *