சீன நாட்டுப் பிரஜை ஒருவர் கடல் உயிரினங்களை வைத்திருந்த நிலையில் கைது!


 

தவரைமுறையில் கடல் உயிரினங்களை வைத்திருந்த சீன நாட்டுப் பிரஜை ஒருவர் நீர்கொழும்பு, கிம்புலாபிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

சீன நாட்டுக்கு ஏற்றுமதிக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடல் குதிரைகள் அவரிடமிருந்த மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடமிருந்து 33 கிலோவும் 330 கிராம் நிறையுடைய உலர்ந்த கடலட்டைகளும், 05 கிலோவும் 500 கிராம் நிறையுடைய கடல் குதிரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

27 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதுடன், இன்று அவர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளார். இது தொடர்பாக நீர்கொழும்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − three =