சுதந்திர தினத்தை பகிஸ்கரித்து கிளிநொச்சியில் போராட்டம்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உவுகளால் இன்று கிளிநொச்சியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டம் இன்று காலை 10 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

வடக்கு மாகாணத்தில் உள்ள வலி்ந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட குறித்த போராட்டத்தில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

சுதந்திர தினத்தை பகிஸ்கரிக்கும் வகையிலு்ம, தமது பிள்ளைகளின் நிலை என்ன என கேள்வி எழுப்பியும் குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த போராட்டத்தில் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடதக்கதாகும்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *