செயற்கைக் கோள் விண்ணில் செலுத்த உள்ள ஈரான்.


ஈரான் தகவல் மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைச்சர் எம்.ஜே.அசாரி ஜஹ்ரோமி விண்ணில் செலுத்த 6 செயற்கைக் கோள்களை தயாரித்துள்ளதாக ஈ தெரிவித்துள்ளார்.

அவர்,இதனை தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியுள்ளார்.ஈரானிய நாட்காட்டியின் முறைப்படி மார்ச் 19 ஆம் திகதி இந்த செய்மதிகளை பூமியின் சுற்றுவட்டப் பாதையில் செலுத்த திட்டமிட்டுள்தாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை செயற்கைக்கோள் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு நிலையம் மற்றும் ஜாபர் செயற்கைக்கோள் வரவேற்பு நிலையம் நாடு முழுவதும் மூன்று விண்வெளி நிலையங்களில் நிறுவப்பட்டன என அவர் கூறியுள்ளார்.

இந்த துறையில் தொழில்நுட்ப குழு மற்றும் நிபுணர்களின் முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.கடந்த 2019 ஆம் ஆண்டு இமாம் கோமெய்னி ஈரானின் ரொக்கெட ஒன்று வெடித்ததாக மேற்கத்தேய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. எனினும் ஈரானிய அதிகாரிகள் இதனை மறுத்தமையும் குறிப்படத்தக்கது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *