ஜப்பான் யொகோடா விமானப்படை தளத்தில், அமெரிக்கப் படைகள் தீவிரப்பயிற்சி.


ஜப்பானில் உள்ள யொகோடா விமானப்படை தளத்தில், அமெரிக்கப் படைகள் தீவிரப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

பசிபிக் பெருங்கடலில், வட கொரிய ராணுவம் தொடர்ந்து ஆயுதப் பரிசோதனையில் ஈடுபட்டு வருவதால், ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட நட்பு நாடுகளை காக்க, அமெரிக்கப் படையினர் தங்களை தயார் படுத்தி வருகின்றனர்.

வெளிநாடுகளில் குவிக்கப்பட்டுள்ள அமெரிக்க ராணுவத்தினரிடையே கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருவதால், அவர்கள் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளி கடைபிடித்து, பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *