டயானாவின் பாகிஸ்தானிய காதலன்: சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஜெமீமா கான்


மறைந்த இளவரசி டயானா பாகிஸ்தானைச் சேர்ந்த மருத்துவர் ஹஸ்னத் கானைத் திருமணம் செய்து பாகிஸ்தானில் நிரந்தரமாகத் திட்டமிட்டிருந்தார் என ஜெமீமா கான் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் முன்னாள் மனைவியான ஜெமீமா கான்,டயானா குறித்து சஞ்சிகையொன்றுக்கு அளித்துள்ள செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார்.

மேலும், அப்பேட்டியில் டயானா குறித்து இதுவரை வெளிவராத பல தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இது பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

டயானா குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

” ஹஸ்னத் கானை மணந்து கொள்ள அவர் தயாராகியிருந்தார். அப்போது ஹஸ்னத் கான் நீதிமன்றில் சில வழக்குகளை சந்தித்து வந்தார். அதை முடித்த பின்னர் திருமணம் செய்ய முடிவெடுத்திருந்தார் டயானா.

பாகிஸ்தான் சென்று அங்கு ஹஸ்னத் கானின் குடும்பத்தினரையும் அவர் ரகசியமாக சந்தித்துப் பேசியிருந்தார். திருமணம் குறித்தே அவர்கள் பேசியதாக தெரிகிறது.

நானும் பாகிஸ்தானில் திருமணம் செய்திருந்ததால், என்னுடன் தோழியாகி விட்டார் டயானா.

இந்த இரண்டு முறையும், அவர் ஹஸ்னத் கான் குடும்பத்தினரை ரகசியமாக சந்தித்துப் பேசினார்.  திருமணம் குறித்தே அவர்கள் பேசியதாக தெரிகிறது. பாகிஸ்தான் வாழ்க்கையை நீ எப்படி சமாளிக்கிறாய் என்றும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார்.

ஆனால் டயானாவின் திருமண யோசனையை ஹஸ்னத் கான் விரும்பவில்லை. இது கேலிக்கூத்தானது என்று அவர் கூறினார்.

இங்கிலாந்தில் தன்னால் நிச்சயம் வசிக்க முடியாது. அதேசமயம், சாதாரண கணவன் மனைவியாக பாகிஸ்தானில் வேண்டுமானால் வசிக்கலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆனாலும் டயானாவின் ஆசை கைகூடவில்லை. அவர் சார்லஸை மணந்தார்” என்று கூறியுள்ளார் ஜெமீமா கான்.

நன்றி : வீரகேசரி | இலங்கை Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *