தமிழர் தலை நகரில் இருவர் கைது!


சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த முச்சக்கர வண்டியை சோதனைக்குட்டுத்திய போது  4 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இவர்களை  திருகோணமலை சீன துறைமுகத்திற்கு அருகில்  கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த இருவரும் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்கள் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *