தரவரிசையில் 4வது இடத்திற்கு முன்னேறியாது இங்கிலாந்து.


 

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை 4-1 எனக் கைப்பற்றியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் 4வது இடத்திற்கு இங்கிலாந்து முன்னேறியுள்ளது.

எனினும் டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தொடர்ந்தும் முதல் இடத்தில் காணப்படுகின்றது. இங்கிலாந்து – இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் இங்கிலாந்து 4-1 என இந்தியாவை வெற்றிக்கொண்டது. 4வது இடத்தில் இருந்த நியூசிலாந்து 5வது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

அந்த தர வரிசையில், தென்னாபிரிக்கா அணி 2வது இடத்திலும், அஸ்திரேலியா அணி 3வது இடதிலும் காணப்படுகின்றன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *