தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே இணைந்து செயற்படமுடியும்- சி.வி


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட்டால், கொள்கை ரீதியாக அரசியல் பயணத்தில் இணைந்து செயற்படுவது தொடர்பில் பரிசீலிக்க முடியும் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன்  தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையும் பட்சத்தில், மக்களின் நலன்கருதி பொது கொள்கையொன்றை முன்நிறுத்தி எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு முன்னர் கலந்துரையாடுவதற்கு தான் தயாராகவுள்ளதாக தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவம் மாற்றமடையவுள்ளதாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரனிடம் வினவியபோது அவ்வாறான திட்டம் இல்லை என அவர் பதிலளித்தார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *