தாய்பாலின் தேவை ஒரு குழந்தைக்கு எவ்வளவு முக்கியம் தெரியுமா ?


 • குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் தரப்பட வேண்டும்!
 • சிசேரியன் பிரசவம் என்றால், பிறந்த 4 மணி நேரத்துக்குள் குழந்தைக்குத் தாய்ப்பால் தர வேண்டும்
 • .
  குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே தர வேண்டும்.
 • 6 மாதத்துக்குப் பிறகு இணை உணவுகளுடன் தாய்ப்பாலும் தொடர்ந்து தர வேண்டும். 2 வருடம் தாய்ப்பால் தருவது குழந்தைக்கு மிகவும் நல்லது
 • தாய்ப்பால் அளிக்கும் தாய், தினமும் குளித்து சுத்தமாக இருப்பது மிகவும் அவசியம்.
 • தாய்ப்பால் கொடுப்பதற்காக விசேஷமான உணவுகள் எதுவும் தேவையில்லை.
 • தாய்க்கு தினமும் சுமார் 500 கலோரிகள் மற்றும் 15 கிராம் புரதம் கூடுதலாகத் தேவை, அவ்வளவுதான்.
 • 2 டம்பர் பால், ஒரு முட்டை, ஒரு கரண்டி பச்சைக் காய்கறிகள் போதும்.
 • தாய்க்கும் சேய்க்கும் உடல் நலம் பாதித்தாலும் தாய்ப்பால் தர வேண்டும். எந்த நோய்க்கும் பயந்து தாய்ப்பாலை நிறுத்தத் தேவையில்லை.
  நன்மைகள்
  தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைக்குப் புத்திக்கூர்மை அதிகமாக இருக்கும். இதுவும் ஆராய்ச்சி முடிவுதான். நல்ல அறிவுள்ள மாணவனாகத் திகழ தாய்ப்பால் மிகவும் அவசியம்.
 • தாய்ப்பால் தருவதால் பெண்களுக்கும் நன்மை உண்டு.
 • மார்பகப் புற்றுநோய், சினைப்பை புற்றுநோய் வரும் வாய்ப்பு, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்குக் குறைவு.
 • தாயின் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு குறைந்து உடல் எடை சீராகப் பராமரிக்கப்படுகிறது.
 • குழந்தை பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுத்தால், அந்தச் சமயத்தில் தாய் கருத்தரிப்பதில்லை.இதை ஒரு தாற்காலிகக் கருத்தடை முறை என்றும் சொல்லலாம்.

தன் குழந்தைக்குத் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து வளர்ப்பேன் என்று, கர்ப்பம் அடைந்த நாளிலிருந்து ஒரு தாய் உறுதி எடுத்துக்கொண்டால், நிச்சயமாக அந்தத் தாயால் குழந்தையைத் தாய்ப்பால் மட்டுமே கொடுத்து நன்றாக வளர்க்க முடியும். தாய்ப்பால் குடிக்காத குழந்தை உரிமை மறுக்கப்பட்ட குழந்தை என்றும், ஏமாற்றப்பட்ட குழந்தை என்றும் சமூக மருத்துவ வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *