தியானம் எல்லோருக்கும் நிம்மதியைத் தருமா?


தியானம் எல்லோருக்கும் நிம்மதியைத் தருமா? – ஆய்வில் சொல்வது என்ன?

உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தியானம் செய்யுங்கள்!’ என்ற ஆலோசனையை வழங்காத மருத்துவர்களே இல்லை எனலாம்.

உலகமே இயந்திர மயமாகிவிட்ட சூழலில், நிம்மதியைத் தேடி, தியானப் பயிற்சி வகுப்புகளுக்குப் படையெடுப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது.

ஆனால்,

`தியானத்தில் ஈடுபடும் அனைவருக்குமே மன அமைதியும் நிம்மதியும் கிடைப்பதில்லை’ என்ற அதிர்ச்சிகரமான முடிவு ஓர் ஆய்வில் வெளிவந்துள்ளது.

லண்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், வழக்கமாகத் தொடர்ந்து தியானப் பயிற்சியில் ஈடுபடுவோரில் கால்வாசி பேருக்கு ( நான்கில் ஒருவருக்கு) உளவியல் ரீதியாக மனநிம்மதி கிடைப்பதில்லை, மாறாக பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளுக்கு ஆளாகின்றனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு முடிவு, `பிளாஸ் ஒன்’ என்ற இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

தியானம்

ஆனால், தொடர்ச்சியாக எதிர்மறை சிந்தனைகளில் இருப்பவர்களுக்கே தியானத்தில் ஈடுபட்டாலும் மனநிம்மதி கிடைக்கவில்லை என்றும் அதில் கண்டறிந்துள்ளனர். மற்றொருபுறம், இணையதளத்தின் மூலம் இரண்டு மாதங்களுக்கும் குறைவான நாள்கள் தியானப் பயிற்சியில் ஈடுபட்ட 1,232 பெண்கள் மற்றும் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

அதன் முடிவில், குறைவான நாள்கள் தியானத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கு எதிர்மறை உணர்வுகள் ஏற்படவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

பெண்

“தியானம் செய்யும்போது, இதுபோன்ற வித்தியாசமான உணர்வுகள் ஏன் ஏற்படுகிறது, எப்போது ஏற்படுகிறது மற்றும் எப்படி ஏற்படுகிறது என்கிற கேள்விகளுக்கு மட்டுமே இந்த ஆய்வில் விடை கிடைத்துள்ளது.

தியானம் செய்யும்போது, எதிர்மறை உணர்வுகள் ஏற்படும் அனுபவங்கள்குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும்” என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

நன்றி – vikatanLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *