துப்பாக்கிச் சுட்டு சம்பவம் அதிர்ச்சியில் அமெரிக்கா!!


அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் காயமடைந்துள்ளனர். அதில் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

நியூ ஓர்லியன்ஸின் ‘700 block of Canal Street’ என்ற இடத்தில்அந்நாட்டு நேரப்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.20 மணி தொடக்கம் 3.25 மணிக்குள்துப்பாக்கிச்சுட்டு சம்பவம்  இடம்பெற்றதாக நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு காரணமாக காயமடைந்தவர்கள் நியூ ஓர்லியன்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலையிலும், ஏனையோர் துலேன் வைத்தியசாலையிலும் சிகிச்சைக்காக அனுமிக்கப்பட்டுள்ளனர்.

அதிகபடியான சனத்தொகை இருந்த பகுதியில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளமையினால் துப்பாக்கிதாரி அடையாளம் காணப்படவில்லை என நியூ ஆர்லியன்ஸ் பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்ட நிலையில் விசாரணை முன்னெடுக்கப்படுகின்றது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *