நியூசிலாந்து அணிக்கான இந்திய அணி அறிவிப்பு.


 

நியூஸிலாந்து அணியுடனான தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உபாதை காரணமாக தொடரிலிருந்து விலகிய ஷிகர் தவானுக்காக மாற்று வீரர் ஒருவரும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் சுற்றுலா மேற்கொண்டு நியூஸிலாந்துக்கு சென்றுள்ள இந்திய அணி, 5 இருபதுக்கு 20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.

முதலாவது இருபதுக்கு 20 போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி ஒக்லண்டில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில், இருபதுக்கு 20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான இந்திய குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஷிகர் தவான் உபாதை காரணமாக ஒருநாள் மற்றும் இருபதுக்கு 20 தொடரிலிருந்து விலகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக ஒருநாள் தொடருக்காக பிருத்வி ஷாவும், இருபதுக்கு 20 தொடரில் சஞ்சு சம்சனும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஒருநாள் அணிக்கு பிருத்வி ஷா முதல்தடவையாக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஷிகர் தவானுக்கு பதிலாக T20 தொடரில் சஞ்சு சாம்ஸனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் நியூஸிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள இருபதுக்கு 20 தொடரில் விராட் கோலி, ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ஸ்ரேயோஸ் ஐயர், மணிஷ் பாண்டே, ரிஷப் பந்த், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், யஷ்வேந்திர சஹால், வொஷிங்டன் சுந்தர், ஜஸ்பிரிட் பும்ரா, மொஹமட் ஷமி, நவ்தீப் ஷைனி, ரவிந்திர ஜடேஜா,ஷர்துல் தாக்கூர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *