நீதியை நிலைநாட்ட துவிச்சக்கர வண்டியில் ஜனாதிபதியிடம் பயணம்….


கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் தவிசாளரின் சட்டமீறலாலும், அட்டடூழியத்தாலும் அறாயகத்தாலும் துவண்டு போன அருநாதன் ஆகிய நான் உண்மையான நேர்மையான நீதியை பெறுவதற்காக ,அதி உத்தமரான ஜனாதிபதியிடம் ஓட்டமும் நடையுமா செல்கிறேன். எனத் தெரிவித்து கரைச்சி பிரதேச சபைக்கு முன் கிளிநொச்சி திருநகரை  சேர்ந்த நபர் ஒருவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் இன்று வடக்கு மாகாண ஆளுனரையும் சந்தித்து அதன் பின்னர் ஜனாதிபதி செயலகத்திற்கு துவிச்சக்கர வண்டியில் செல்வதாகவும் என்னிடம் விடுதி உள்ளது.தேவையான அனுமதிகளை பொய்யான காரணங்களைக் கூறி தர  மறுகிறார்.
நான் எனது விடுதிக்கு லங்காதீப என்ற சிங்களப் பெயர் வைத்ததாலும் நான் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர் என்பதாலும் எனக்கு அனுமதி தர மறுக்கிறார். எந்த பெயரை வைக்க வேண்டும் என்பது எனது விருப்பம் இதனால் இவரின் காட்டாட்சிக்கு எதிராக நீதி தேடி அலைகிறேன் என தெரிவித்தார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *