நெருங்கும் காலக்கெடு: மலேசியாவிலிருந்து வெளியேற பதிவு செய்யும் வெளிநாட்டினர்


Immigration officers attending to the foreigners during the last minutes rush for the ‘ Back For Good’ (B4G) programme at Immigration office in Seberang Jaya, Penang yesterday. – Starpic by MUSTAFA AHMAD/The Star/24 Dec 2019.

பெனாங்: மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினர் நாட்டைவிட்டு வெளியேற அறிவுறுத்தும் ‘Back for good’ எனும் திட்டம் வரும் டிசம்பர் 31ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், நாடு திரும்புவதற்காக வெளிநாட்டினர் பெருமளவில் பதிவு செய்து வருகின்றனர் என்கிறது மலேசிய குடிவரவுத்துறை.

பெனாங் மாநிலத்தில் உள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் மட்டும் கடந்த 2 நாட்களில் 1200 விண்ணப்பங்கள் பரிசீலணை செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய இத்திட்டத்தின் மூலம் நாடு திரும்ப பெனாங் பகுதியில் இதுவரை 9,678 வெளிநாட்டினர் பதிவு செய்துள்ளனர்.

விசா முடிந்த பின்னர் அல்லது முறையான பயண ஆவணங்களின்றி மலேசியாவில் சட்டவிரோதமாக பணியாற்றும் வெளிநாட்டினரை, சட்டவிரோத குடியேறிகளாக அடையாளப்படுத்துகின்றது மலேசிய அரசு.

‘Back for Good’ திட்டத்தின் கீழ் மலேசியாவிலிருந்து வெளியேறுபவர்கள் 700 மலேசிய ரிங்கட்டை (இந்திய மதிப்பில் சுமார் 11 ஆயிரம், இலங்கை மதிப்பில் 28 ஆயிரம்) அபராதமாக செலுத்த வேண்டும்.

கடந்த 2014 முதல் ஆகஸ்ட் 2018 வரை நடைமுறையில் இருந்த மன்னிப்புத்திட்டத்தின் மூலம் 840,000 வெளிநாட்டினர் மலேசியாவிலிருந்து சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *