பஞ்ச தீபம்.


வீட்டின் பூஜை அறையில் விளக்கு வைக்க குறிப்பிட்ட சில எண்ணைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பஞ்சதீபம் எண்ணை மூலம் தீபம் ஏற்றுவதால் ஐந்து எண்ணெய்களின் பலனும் கிடைக்கும் .தினமும் பஞ்ச தீப தீபம் ஏற்றி கடவுளின் அருள் பெறுக. இதனை செய்வதற்க்கு முன்பு குளித்து இறவனை வணங்கிய பின் செய்வதே அதன் முழுபலனையும்அடைய செய்யும். (பஞ்ச = ஐந்து)
பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலன்கள்.
பசு நெய்- கிரகதோஷம்,செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணை- தாம்பத்ய விருத்தி,ஆரோக்கியம் அதிகரிக்கும்
வேப்ப எண்ணை- ஐஸ்வர்ய யோகம்,உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
இலுப்பை எண்ணை-சகல காரிய வெற்றி
விளக்கெண்ணை- புகழ்,குல தெய்வ அருள் கிடைக்கும்
செய்முறை :
ஒரு லிட்டர் பஞ்சதீபம் எண்ணை செய்ய தேவையானவைகள்.
1.சுத்தமான பசு நெய் – 200 மில்லி
2.நல்லெண்ணை – 350 மில்லி
3.வேப்ப எண்ணை – 100 மில்லி
4.இலுப்பை எண்ணை – 200 மில்லி
5.விளக்கெண்ணை – 150 மில்லி
மேலே குறிப்பிட்ட எண்ணைகளை அதன் அளவு மாறாமல் ஒன்றாக சேர்த்து ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்து கொண்டு தினமும் தீபம் ஏற்றி பஞ்ச தீபம் எண்ணெய்யின் பலனை அடையலாம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *