பல்கலைக்கழக மாணவன் மாயம் – வவுனியாவில் அதிர்ச்சி!!


யாழ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த 23 வயதான பாலசுப்பிரமணியம் தர்மிலன் என்ற மாணவனே காணாமல்போயுள்ளார்.

குறித்த இளைஞன் வவுனியா கனகராயன்குளப்பகுதியைச் சேர்ந்தவராவார்.

இவர்   நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் அவர் விட்டு திரும்பாத காரணத்தால்அவரது பெற்றோர்களால் கனகராயன்குளம் பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டது.

இளைஞர்கள், மற்றும் பொலிசார் குறித்த இளைஞன் சென்றதாக தெரிவிக்கப்படும் காட்டு பகுதியில் தீவிரதேடுதல் நடாத்தியிருந்த நிலையில் இதுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *