பிக்பாஸ் டேனியால் காதலியை கரம் பிடித்தார்.



தனியார் தொலைக்காட்சியில் ஒன்றில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட டேனியால் காதலியான டெனிஷாவை நேற்று கரம் பிடித்துள்ளார்.

16 போட்டியாளர்களாகக் கலந்து கொண்ட ´பிக் பாஸ்´ வீட்டில் இருந்து 08 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். 08 நபராக டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

வெளிய வந்த டேனியல், தனது காதலியான டெனிஷாவை நேற்று கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.

வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனத் டேனியல் தெரிவித்துள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =