பிரிட்டிஷ் பிர­தி­நிதி கரேத் பெய்லி இலங்­கைக்கு விஜயம்|தமிழ் மக்கள்அபிலாஷைக்கு தீர்வு தருமா ?


 

இலங்­கைக்கு வருகை தந்­தி­ருக்­கின்ற   பிரிட்­டனின்  வெளி­வி­வ­கார மற்றும் பொது­ந­ல­வாய அலு­வ­ல­கத்தின் தெற்­கா­சிய  பிராந்­தி­யத்­திற்­கான பணிப்­பாளர் கரேத் பெய்­லியை நேற்­றைய தினம்   தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் மற்றும் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் ஆகியோர்   கொழும்பில்  சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதே இந்த விடயம் வலி­யு­றுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

இலங்­கைக்­கான பிரிட்டிஷ் உயர்­தா­னி­கரின்  இல்­லத்தில்   நேற்று   முற்­பகல் 11 மணி முதல் 12 மணி­வரை நடை­பெற்ற   இந்த சந்­திப்பில் ஜெனிவா பிரே­ரணை மற்றும் அதன் அமு­லாக்கம்  தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்பு அவர்­களின் அபி­லா­ஷைகள்   உள்­ளிட்ட பல்­வேறு விட­யங்கள் தொடர்­பாக விரி­வாக  பேச்சு நடத்­தப்­பட்­டது.

 எதிர்­வரும் மார்ச்  மாதம் ஜெனிவா மனித உரிமை பேர­வையின்  43 ஆவது கூட்டத் தொடர் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் இலங்கை விவ­காரம் குறித்து ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் அவ­தா­னிப்பு அறிக்கை ஒன்றை வெ ளியி­ட­வுள்ளார். இந்த சூழலில் ஜெனி­வாவில்  இலங்கை தொடர்­பாக நிறை­வேற்­றப்­பட்­டுள்ள   பிரே­ரணை அமு­லாக்­கத்தின் அடுத்த கட்டம் தொடர்பில்  இலங்கை அர­சாங்­கத்­தி­னதும்   தமிழ் மக்­க­ளி­னதும்  நிலைப்­பா­டுகள் மற்றும்  எதிர்­பார்ப்­புக்கள்  என்­ப­வற்றை ஆராயும் நோக்­கி­லேயே   பிரிட்டிஷ் பிர­தி­நிதி  கரேத் பெய்லி இலங்­கைக்கு விஜயம் செய்­தி­ருக்­கின்றார்.

 அதன்­படி   இலங்கை வந்­துள்ள பிரிட்டிஷ் பிர­தி­நி­தியை தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின்  பிர­தி­நி­திகள்  சந்­தித்து ஜெனிவா விவ­காரம் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து விரி­வாக  பேச்சு நடத்­தி­யி­ருக்­கின்­றனர்.

இதன்­போது கருத்து வெளி­யிட்ட தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் அர­சாங்­க­மா­னது  ஜெனிவா மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட   இலங்கை தொடர்­பான 30/1 என்ற பிரே­ர­ணையை  முழு­மை­யா­கவும் விரை­வா­கவும்  அமுல்­ப­டுத்த வேண்டும். இந்த  பிரே­ர­ணை­யி­லி­ருந்து அர­சாங்கம் ஒரு­போதும்  விலக முடி­யாது. அவ்­வாறு அர­சாங்கம் வில­கு­வ­தாக அறி­வித்தால் அடுத்த கட்­ட­மாக நாங்கள் சர்­வ­தேச சமூ­கத்­துடன் பேச்­சு­வார்த்தை நடத்தி  தீர்­மானம் எடுப்போம்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *