பிரித்தானியாவில் மாயமாகும் வியட்நாமிய இளம்பெண்கள்


பிரித்தானியாவின் உயர் குடியினர் கற்கும் தனியார் பள்ளிகள், வியட்நாமிய இளம்பெண்களை பிரித்தானியாவுக்குள் கடத்த பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மாணவர் விசாவில் பிரித்தானியாவுக்குள் கடத்தப்படும் வியட்நாமிய பெண்கள், சிறிது காலத்திற்குப்பின் மாயமாகியிருக்கிறார்கள்.

ஆண்டொன்றிற்கு 25,000 பவுண்டுகள் கட்டணம் வசூலிக்கும் பிரித்தானிய தனியார் பள்ளிகள் சிலவற்றால் ஸ்பான்சர் செய்யப்பட்டு பிரித்தானியாவுக்குள் கொண்டுவரப்படும் அல்லது வாங்கப்படும் 15 வயது முதல் உள்ள இளம்பெண்கள், பள்ளியில் இணைந்து முதல் பருவம் முடிந்த உடனேயே காணாமல் போயிருக்கிறார்கள்.

அப்படி காணாமல் போன இளம்பெண்களில் பலர் அழகு நிலையங்களில் வேலை செய்வது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இடைப்பட்ட காலத்தில் அவர்கள் எங்கிருந்தார்கள், மற்ற இளம்பெண்கள் என்ன ஆனார்கள் என்னும் கேள்விகளுக்கு பதில் இல்லை.

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும், 21 வியட்நாமிய இளம்பெண்கள் மாயமாகியுள்ளதாக பிரபல பிரித்தானிய பத்திரிகையான THE TIMES செய்தி வெளியிட்டுள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *