புதிய சட்டங்களை மீளப்பெற அமைச்சரவை அனுமதி!!!


அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது,பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு புதிய சட்டங்களை வகுக்கும் நோக்குடன் பழைய அமைச்சரவை அனுமதி வழங்கிய சட்டமூலத்தை மீளப்பெற புதிய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையில், குறித்த சட்டமூலம் காணப்படுவதால் அதனை மீளப்பெற அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் காரணமாக 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்தும் அமுலில் காணப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அரசாங்கத்தின் ஊடக பேச்சாளர்களாக இராஜாங்க அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *