புர்கினோ பசோவில் துப்பாக்கிதாக்குதல் -37பொதுமக்கள் உயிரிழப்பு ,60 பேர் காயம்!


 

புர்கினோ பசோவில் துப்பாக்கிதாரியினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பெரும்பாதிப்பு ஏற்பட்டுள்ளது .

மேற்கு ஆபிரிக்க நாடான புர்கினோ பசோவில் இராணுவத்தினருக்கும் ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்தநிலையில் ஐ.எஸ் தீவிரவாதி என சந்தேகிக்கப்படும் துப்பாக்கிதாரியினால் புர்கினோ பசோவில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி  தாக்குதலில் 37 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் காயமடைந்துள்ளனர்.

மேலும்புர்கினோ பசோவில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 7 ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து  பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளன என்றும் குறிப்பிடப்படுகிறது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *