பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் நள்ளிரவு விபத்து


பூநகரி செல்விபுரம் வீதி வளைவில் நள்ளிரவு விபத்தில் நால்வர் காயம்  அவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பூநகரி பொலிசார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கப் வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
வேக கட்டுப்பாட்டை இழந்து கப் வாகனம் வீதி ஓரத்தில் இருந்த மரமொன்றுடன் மோதியுள்ளது. வாகனத்தில் நால்வர் பயணித்துள்ள நிலையில் இருக்கையில் அமர்ந்து பயணித்த சாரிதி மற்றம் உதவியாளர் ஆகிய இருவரும் படுகாயங்களிற்குள்ளாகியுள்ளனர். மரத்துடன் மோதுண்டமையால் வாகனம் பலத்த சேதமடைந்தள்ளது.
குறித்த இருவரும்ம் பலத்த பிரயத்தனங்கள் மத்தியில் மீட்கப்பட்டுள்ளனர். பின்னால் இருந்து பயணித்த இருவரும் சாதாரண காயங்களிற்குள்ளாகியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். காயமடைந்தவர்களில் மூவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவு்ம, மற்றயவர் பூநகரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர். விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் கடந்த 23.11.2019 அன்று இரு பார ஊர்திகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி நால்வர் படுகாயடைந்தமை குறிப்பிடதக்கதாகும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *