மஹிந்த பாடசாலைகள் அமைக்கத்திட்டம்-பந்துல குணவர்தன


ஹோமாகம  பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போது நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் 25 மஹிந்த ராஜபக்ஷ பாடசாலைகளை அமைக்கவுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும் குறிப்பிட்ட அவர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின்போது ஸ்தாபிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ வித்தியாலயத்தின் கல்வி நிலை மிக உயர்ந்த நிலையில் தற்போது காணப்படுவதாகவதாக இதன்போது சுட்டிக்காட்டினார்.

எனவே இந்த நிலைமையை மேலும் மேம்படுத்தும் வகையில் தமது அமைச்சு அதிகபட்ச ஆதரவை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *