மஹிந்த ராஜபக்ஷவின் கீழ், 88 அரச நிறுவனங்கள்….


இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கான துறைகள், நிறுவனங்கள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு நேற்று நள்ளிரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டது.

இதன்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் கீழ், அதிகபட்சமாக 88 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

முன்னைய அரசாங்கத்தில் சட்டம் ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் துறை தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

நிதி மற்றும் பொருளாதார கொள்கை அபிவிருத்தி அமைச்சின் கீழ் 48 நிறுவனங்களும் புத்தசாசன, கலாசார மற்றும் மத விவகார அமைச்சின் கீழ் 23 நிறுவனங்களும் நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் 17 நிறுவனங்களுமாக மொத்தம் 88 நிறுவனங்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வசமுள்ள அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

இதுவரை அமைச்சராக யாரும் நியமிக்கப்படாத நிலையில், சமல் ராஜபக்ஷ இராஜாங்க அமைச்சராகப் பதவி வகிக்கும் பாதுகாப்பு அமைச்சின் கீழ், 31 அரச நிறுவனங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.

பொலிஸ் முப்படைகள், சிவில் பாதுகாப்புப் படை, குடிவரவு, குடியகல்வு திணைக்களம், அரச புலனாய்வுச் சேவை, ஆட்பதிவுத் திணைக்களம், வளிமண்டலவியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மையம் ஆகியனவும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம் ஆகியன நீதி, மனித உரிமைகள், சட்ட மறுசீரமைப்பு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனவென்பதும் குறிப்பிடத்தக்கதுLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *