முரசுமோட்டை பகுதியில் விபத்து பதினோரு பேர் வைத்தியசாலையில்..


இன்று பிற்பகல் கண்டாவளை பிரதேச செயலாள ர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் வாகனமும் தனியார்  பேரூந்தும் விபத்துக்குள்ளானதில் டிப்பர் வாகனத்தின் சாரதி உதவியாளர் மற்றும் பேரூந்தில் பயணித்த பத்து பயணிகள் உட்பட பதினோரு பேர் காயங்களுக்குள்ளான நிலையில் வட்டக்கச்சி வைத்தியசாலையில் இருவரும் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒன்பது பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த  டிப்பர் வாகனமும் தனியார் பேரூந்தும் முரசுமோட்டைப் பகுதியை கடக்கும் போது தனியார் பேரூந்து நிறுத்தப்பட்டுள்ளது. பின்தொடர்ந்து வந்த டிப்பர் வாகனம் தனியார் பேரூந்தின் பின் பகுதியில் மோதுண்டே குறித்த விபத்து ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *