மேலதிக வகுப்புக்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு கோரிக்கை!


திருகோணமலையில் டெங்கு நோய் அதிகமாக பரவி வருவதனால் பாடசாலையில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்களை உடனடியாக மட்டுப்படுத்துமாறு திருகோணமலை வலயக்கல்விப் பணிப்பாளர் கடிதம் மூலம் பாடசாலைகளுக்கு அறிவித்துள்ளார்.

இது தொடரபாக அறிவிக்கபட்ட கடிதத்தில் கடந்த ஜனவரி 06ம் திகதி நகரசபையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல் தீர்மானத்திற்கு அமைய  டெங்கு நோய் தாக்கம் தற்போது நகர எல்லையில் அதிகரித்ததன் அடிப்படையில் மாணவர்கள் இந்த டெங்கு நோயினால் எளிதில் பாதிப்புக்குள்ளாகின்றனர். அதேபோல ஆசியர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை டெங்கு காய்ச்சலில் இருந்து பாதுகாக்கும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கு திருகோணமலை நகரில் நடாத்தப்படுகின்ற மேலதிக வகுப்புக்களை காலை 7.00மணிக்கு முன்னதாகவும் மாலை 6.00மணிக்கு பின்னரும் நடாத்துவதை தற்காலிகமாக இடை நிறுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் வேகமாக பரவி வரும் இந்த டெங்கு நோயில் இருந்து மக்களை பாதுகாக்கும் இச் செயற்திட்டத்தில் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *