யாசகர்கள் எவரையும் அடைத்து வைக்கவில்லை!!


யாசகர்களை முகாமொன்றில் அடைத்து வைக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நாட்டில் உள்ள யாசகர்களை அகற்றும் நோக்கில் பொலிஸ் தலைமையகம் நாடளாவிய ரீதியில் இருக்கும் யாசகர்களை பொலிஸாரை பயன்படுத்தி அகற்றி வருவதாகவும், அவர்களை ரிதியகம பகுதியில் முகாமொன்றில் அடைத்து வைக்குமாறு ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாட்டின் எப்பகுதியிலும் யாசகர்கள் பொலிஸாரால் அகற்றப்படவில்லை என்பதுடன், பொலிஸ் தலைமையகத்தால் ஒரு போதும் பொலிஸ் நிலையத்துக்கு இவ்வாறான அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை. இவ்வாறு பரப்பப்படும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை” என்று தலைமையகம் தெரிவித்துள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *