ராஜபக்ஷவின் சிங்கள சஹ்ரான்களே இனவாதத்தை தூண்டுகின்றனர்! ஜே.வி.பி.


மகிந்த ராஜபக்சவின் குழுவில் உள்ள சில சிங்கள சஹ்ரான்களே இனவாதத்தை தூண்டி வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன் இதற்கு ஐக்கிய தேசிய கட்சியில் இருக்கும் சிலரும் மறைமுகமாக ஆதரவளித்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் முஸ்லிம்களின் தனித்துவ கலாச்சார அடையாளங்களை இல்லாமலாக்குவதன் மூலம் அடிப்படைவாதத்தைத் தோற்கடிக்கவும் அவர்களின் ஒத்துழைப்பு இல்லாது அடிப்படைவாதத்தை இல்லாமலாக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் முஸ்லிம்களுக்கு எதிராக காவல்துறையினர் மேற்கொள்ளும் நடவடிக்கை மிகவும் கவலைக்குரிய விடயம் எனவும் பயங்கரவாத தாக்குதலை முஸ்லிம் அமைச்சர்கள் மீது மாத்திரம் சுமத்தி அரசாங்கம் தப்பித்துக்கொள்ள முயற்சிக்கா தாம்மால் இடமளிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தேயிலை சபை தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *